சேலம் அய்யந்திருமாளிகை நேசக்கரங்கள் ஆதரவு ஏற்கும் இல்லத்தில் தேசிய இளைஞர் தினம் மற்றும் சுவாமி விவேகானந்தர் 158 வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு இல்ல தலைவர் செல்லதுரை தலைமை தாங்கினார். இல்ல நிறுவன செயலர் பெரியசாமி கலந்து கொண்டு தேசிய இளைஞர் தினம் மற்றும் சுவாமி விவேகானந்தர் இந்திய திருநாட்டிற்கு ஆற்றிய பணிகள் குறித்து இல்ல மாணவ, மாணவியர்களிடையே பேசினார். இளைஞர் தினத்தில் தேசிய ஒருமைபாடு உறுதிமொழி அனைவரும் எடுத்து கொண்டார்கள். தேசிய இளைஞர் தினத்தையொட்டி நடைபெற்ற பேச்சுப் போட்டி, ஓவிய போட்டி, கட்டுரை போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்த விழாவில் இல்ல மேலாளர்கள் துரைசாமி, சுப்பிரமணியம், இல்ல கண்காணிப்பாளர் சண்முகபிரியா, உதவி மேலாளர் கோவிந்தராஜ், விடுதி வார்டன் மதன், மகாதேவன், கோமதி மற்றும் இல்ல மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
